கலை என்ற ஜோதி…..





இந்தியாவின் ஆதித்தழிழன் நாட்டார் கலைகள் யாழ்ப்பாணத்தில் மாணவர்களிற்கு கற்பிக்கப்பட்டது என்பது அதிஸ்டவசமான ஒன்று.அம்மாணவர்களுள் நானும் ஒருவர் என கூறும்போது மகிழ்வுடன் பெருமையும் அடைகிறேன்.
கற்றதென்னவோ ஐந்து நாட்கள் தான்.ஆனால் மனதைவிட்டு நீங்காத நாட்கள் அவை. “ஐந்து நாட்களில் எம்மால் மேடையேற முடியுமா?” என நாம் சந்தேகத்தில் இருக்கும் போது கூட “முடியும்”என்ற நம்பிக்கையுடன் பழக்கியவர் எமது குரு “வேணு” எனும் வேணுகோபால்.
எனக்கு அவர் அறிமுகமானது சுவாரஸ்யமான அனுபவம்.
நான் உள்ளகப் பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த வேளை யாழ்ப்பாண மாணவர்களிற்கான “புத்தாக்கப்பயிற்சி” ஒன்றை ஒழுங்கமைத்திருந்தனர்.அதன் முதல்நாள் வைபவம் இனிய நாட்டார் பாடலுடன் ஆரம்பமானது.


யாழ் குடாநாட்டுச் சந்தைகளில் நடப்பது என்ன…???




யாழ்குடாநாட்டுப் பகுதியில் சந்தையில் விற்க்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் மருந்து வகையினாலப் பழுக்க வைக்கப்பட்டவையாகவே விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்தியை அடுத்து அவை பற்றிய தகவல் திரட்டும் நோக்குடன் தோட்டத் தொழிலாளர்களையும் மாம்பழ விற்பனையாளர்களையும் வாடிக்கையாளர்களையும் அணுகினேன்.கிடைத்த தகவல்கள் மாம்பழத்தை வெறுக்கும் அளவிற்கு பயப்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.




பனைசார் கைவினைப்பொருட்கள்







கைவினைப் பொருள் உற்பத்தியினுள் பனந்தும்புத் தொழில் கைப்பணித் தொழில் பொதி செய்யும் பெட்டிகள் அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி என்பன அடங்குகின்றன. இத்தகைய தொழிற்பாடிற்கு மூலப்பொருட்களாக திகழ்வது பனை ஓலை குருத்தொலை சார்வு ஓலை ஈர்க்கு நார் போன்றவையாகும்

யாழ்ப்பாணத்தில் பனைவளம்






இலங்கையில் வடபகுதியான யாழ் மண்ணில் பனையானது 40000 குடும்பத்திற்கு முழுமையான வருமானத்தைத் தருகின்றது. இதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டிலும் வாழ்விலும் உணவிலும் பனையானது முக்கிய இடத்தினை வகித்து வருவதாக உள்ளது





ஊடகப் பயணத்தில் என் அனுபவம் -கொழும்பு



ஊடகப் பயணத்தில் என் அனுபவம்





என் வாழ்வில் மறக்கமுடியாத காலம் இந்த ஊடக கற்கைக் காலம்.இது ஒரு பொற்காலம் என்றே கூறுவேன்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முழுநேர நான்காம் அணி மாணவர்களாகிய நாம் உள்ளகப் பயிற்சிக்காக கொழும்பு செல்லவேண்டி இருந்தது.செல்லும் நாளுக்கு ஒரு வாரத்திற்க்கு முதலே ஆயத்தங்கள் செய்யத்தொடங்கிவிட்டோம்.

கொண்டு செல்லும் பொருட்கள்;,யார் யாரிற்க்கு என்னென்ன பொறுப்பு? ,பண விடயம்,உணவு ஏற்பாடு என சகல விடயங்களும் செல்வதற்க்கு இரு நாட்களிற்க்கு முதல் இடம்பெற்ற கூட்டத்தில் பேசப்பட்டது.
செல்லும் நாளும் வந்;தது.அதாவது செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி.அன்று மாலை சுமார் 4.30 மணியளவில் மாணவர்கள் அனைவரும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கூடினோம்.எம்மை வழியனுப்பி வைப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பேராசிரியர் ஞானகுமாரன் அவர்கள் வந்திருந்தார்.அவரது வாழ்த்துரை மற்றும் கருத்துக்கள் மற்றும் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் இயக்குனர் திரு.தே.தேவானந் அவர்களின் அறிவுரைகளும் எனக்கு அவசியம் தேவைப்பட்டன.அவர்களும் அவற்றைத் தர மறக்கவில்லை.

இந்திய அநுபவம்






ஊடகக் கற்கை நெறியில் உள்ளகப் பயிற்சி செல்வது இது எனக்கு இரண்டாவது தடைவை.முதற் தடவை கல்விச் சுற்றுலாவிற்காக கொழும்பு சென்று வந்தேன்.அங்கு பெற்ற கல்விச் சுற்றுலா அநுபவத்துடன் இந்தியா சென்றேன்.



இந்திய உள்ளகப் பயிற்சியின் போது இடம்பெற்ற செயற்பாடுகள் பெரும்பாலும் புதிய விடயங்களைக் கற்றுத் தருவனவாகவே அமைந்தன.
நாம் இலங்கையிலிருந்து சென்னையை அடைந்தவுடன் யார் எம்மை இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வார்கள்?யார் அழைக்க வந்திருப்பார்கள்? என பலவாறாக நான் சிந்தித்தேன்.

இருப்பினும் யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய இயக்குனர் எம்முடன் வருவதால் அவர் அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பார் என அதைப்பற்றி சிந்திப்பதைக் கைவிட்டேன்.ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் வரவேற்றார்கள்.இது என்னைப் பொறுத்தளவில் நான் கற்றுக் கொண்ட ஒரு விடயமாகவே கூறுவேன்.விமான நிலையத்திற்கு வந்த மாணவர்கள் எமது இயக்குனருக்கு உரிய மரியாதை செய்து வரவேற்றனர்.நாமும் வேறு இடங்களிலிருந்து வந்தோரை வரவேற்றுள்ளோம்.ஆனால் இப்படியும் வரவேற்க்கலாம் என்பதை அன்று அறிந்து கொண்டேன்.

சித்திரவதை


                                                                    சித்திரவதை


சித்திரவதை என்பது உயிர் ஒன்றை மிகக் கொடூரமான முறையில் தண்டிப்பது எனப் பொருள்படும்.அது உடல் ரீதியான துன்புறுத்தலாக மட்டுமன்றி உள ரீதியான துன்புறுத்தலாகவும் அமையும்.


இச்சித்திரவதை குறித்த தகவல்கள் அதற்கான தண்டனைகள் மற்றும் அது குறித்த சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் என்பன பரந்தவை.

அண்iயில் களனி பல்லைக்கழகத்தில் நடைபெற்ற  மருத்துவக் கண்காட்சியில் அதுகுறித்த தகவல்களை அறிந்து தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

சித்திரவதை என்பது எந்தச் செயல் கூடிய வலியை தருகின்றதோ அது உடல் ரீதியாக அல்லது உளரீதியாக இருத்தல்,உள்நோக்கத்துடன் ஒருவரைத் துன்புறுத்தல்,உத்தியோகஸ்தர் அல்லது பகிரங்க அலுவல் அதிகாரத்துடன் செயற்படுத்தப்படும் வேறு நபர்களின் தூண்டுதல் அல்லது அனுமதியுடன் இணக்கத்துடன் செயற்படுத்தப்படுகின்றது.


இச்சித்திரவதையின் முக்கிய விளைவுகள் அவயவங்களை உருக்குலைத்தல்,பாரிசவாதம்,சுயநினைவை இழத்தல்,உணர்ச்சிவசப்பட்ட பீதி உண்டாதல்,இறப்பு மற்றும் காணாமற் போதல் போன்றவை ஏற்படும்.இது உடனடியாக ஏற்படும் ஒரு வேதனை அல்ல.சித்திரவதைக்கு உட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காலம் கடந்ந புற அதிர்ச்சி காயம்,அழுத்த சீர்குலைவினால் வருந்துவர்
இவை அறிகுறிகளாக வெளிப்படும்.அதாவது கடந்த கால நிகழ்வு,கடுமையான மனக்கவலை,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்றவை ஆகும்.

 

Usage Rights

DesignBlog BloggerTheme comes under a Creative Commons License.This template is free of charge to create a personal blog.You can make changes to the templates to suit your needs.But You must keep the footer links Intact.